விளையாட்டு

பயிற்சியாளர் மீது உமர் அக்மல் குற்றச்சாட்டு

பயிற்சியாளர் மீது உமர் அக்மல் குற்றச்சாட்டு

webteam


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், தம்மை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக அந்த அணி வீரர் உமர் அக்மல் புகார் கூறியுள்ளார். 

லாகூரில் உள்ள பயிற்சி மையத்திற்குச் சென்ற தம்மை பயிற்சியெடுக்க அனுமதிக்காமல் அலைகழித்ததாகவும். கிளப் போட்டிகளில் விளையாடி பயிற்சியெடுக்குமாறு மிக்கி ஆர்தர் உத்தரவிட்டதாகவும் உமர் அக்மல் தெரிவித்துள்ளார். உமர் அக்மலின் குற்றச்சாட்டை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மறுத்துள்ளார். அக்மல் தனது திறமையையும், நடத்தையையும் மேம்படுத்திக் கொள்ளுமாறு மட்டுமே தாம் ஆலோசனை வழங்கியதாக ஆர்தர் தெரிவித்துள்ளார். இதனிடையே நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதாக உமர் அக்மலிடம் விளக்கம் கேட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.