விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளி பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளி பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்!

EllusamyKarthik

2021 - 23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. வங்கதேச அணிக்கு எதிரான சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் 66.66 சதவிகித புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்திய அணி 2021 - 23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதுவரை 2 வெற்றி, 1 தோல்வி, 2 போட்டிகளில் டிரா செய்துள்ளது. அதன் மூலம் 50 சதவிகித புள்ளிகளை வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதிலும் இரண்டு ஓவர்கள் நிதானமாக பந்து வீசிய காரணத்தினால் 2 புள்ளிகளை இழந்துள்ளது இந்தியா. 

இலங்கை அணி ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆஸ்திரேலிய அணி இன்னும் தனது கணக்கை தொடங்கவில்லை.