முதல் இன்னிங்ஸில் 220 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணிக்கு 2-வது இன்னிங்கிஸில் பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. முதல் டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி துபாயில் நடந்துவருகிறது. முதல் இன்னிங்கிஸில் இலங்கை அணி, 482 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் கருணாரத்னே 196 ரன்கள் குவித்தார். கேப்டன் சண்டிமால், நிரோஷன் திக்வில்லா, தில்ரூவன் பெரைரா ஆகியோர் அரைசதம் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்டமான நேற்று இன்னிங்சை தொடர்ந்த அந்த அணியின் ஷாம் மசோத் (18), ஷமி அஸ்லாம் (39), ஆஷாத் ஷபிக் (12), பாபர் ஆஸம் (8) ஏமாற்றமளித்தனர். அசார் அலி மட்டும் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார். பின்னர் அந்த அணி 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை தரப்பில் ஹெராத், தில்ருவான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 5 விக்கெட்டுக்கு 34 ரன்களை எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் வகாப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.