விளையாட்டு

பேட்டிங்கில் சொதப்பிட்டோம்: விராத் விரக்தி!

பேட்டிங்கில் சொதப்பிட்டோம்: விராத் விரக்தி!

webteam

‘பேட்டிங்கில் சொதப்பியதால் தோற்றுவிட்டோம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்திய அணியுடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் மன்றோ அபாரமாக ஆடி, 54 பந்துகளில் சதமடித்தார். 

தோல்விக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ‘நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணி ஆடியதைப் பார்த்தால் 235-240 ரன்கள் குவிக்கும் என நினைத்தேன். ஆனால், பும்ராவும் புவனேஷ்வர்குமாரும் நன்றாக பந்துவீசி கட்டுப்படுத்திவிட்டார்கள். ஆனால், எங்களின் பேட்டிங் இந்தப் போட்டியில் மோசமாக அமைந்துவிட்டது. 200 ரன்களை சேஸிங் செய்யும் போது, அனைத்து பேட்ஸ்மேன்களுமே தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும். அல்லது ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக ஆட வேண்டும். நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றேன். மற்றொரு முனையில் தோனியும் சிறப்பாக ஆடினார். இருந்தும் தோற்றுவிட்டோம். இது நடப்பதுதான். 13-14 வது ஓவருக்குப் பிறகு பிட்ச் தன்மை மாறிவிட்டது. ஆனால் பனி ஏதும் இல்லை. இதை காரணமாகச் சொல்ல முடியாது. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை’ என்றார்.