விளையாட்டு

சிஎஸ்கே அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா ?

சிஎஸ்கே அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா ?

jagadeesh

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோன நோய்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் என்பவருக்கு கொரோன தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இப்போது மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் யுஏஇ சென்றுள்ளன. அவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு பவுலர் மற்றும் உதவியாளர்கள் உட்பட மொத்தம் 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.