இந்திய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால், திரிமானே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது போட்டியில் இலங்கை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், கேப்டன் உபுல் தரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர் குணதிலக காயம் காரணமாக விலகியுள்ளார். அவர்களுக்கு பதிலாக அனுபவ வீரர்களான சண்டிமாலும், திரிமானேவும் இலங்கை அணியில் இணைகின்றனர். மூன்றாவது போட்டி பல்லேகேலா நகரில் நாளை நடைபெறுகிறது. இலங்கை அணி கபுகேதரா தலைமையில் களமிறங்குகிறது. இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் பங்கேற்கவில்லை.