இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் அகமதாபாத், கொல்கத்தா ஆகிய இரு நகரங்களில் மட்டுமே நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. அகமாதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தாவில் ஒருநாள் போட்டிகளையும், கட்டாக், விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் டி 20 போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இரு நகரங்களிலும் தலா மூன்று போட்டிகளை நடத்தலாம் என திட்டமிடுதல் குழு இ்ந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் மீது ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: பிக்பேஷ் லீக் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன்: வரலாறு படைத்த மேக்ஸ்வெல்!