விளையாட்டு

தோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...!

தோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...!

EllusamyKarthik

கிரிக்கெட் உலகின் சிறந்த பினிஷரும், பவர் ஹிட்டருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார். 

அணியின் கேப்டனாகவும், ஒரு வீரராகவும் அவரது சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். 

அதில் ஒன்றுதான் ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர்.

கடந்த 2005-இல் இதே நாளில் தோனி இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்களை விளாசியிருப்பார். அந்த இன்னிங்சில் 15 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும். அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிகரமாக 298 ரன்களை சேஸ் செய்திருக்கும். 

இன்று வரை தோனி ஒரு இன்னிங்ஸில் அடித்த அதிகபட்ச ரன்னும் அது தான்.