விளையாட்டு

முக்கிய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் !

முக்கிய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் !

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. மும்பையில் நடைபெறவுள்ள போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை பொறுத்தவரை இந்திய அணி தற்போது இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணி எளிதில் தொடரை வென்று விடும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி அதிர்ச்சி அளித்து வருகிறது. முதல் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் குவித்தது. இரண்டாவது போட்டியில் நாம் 300 ரன்களுக்கு மேல் அடித்தும் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் போராடி டிரா செய்தது. மூன்றாவது போட்டியில் அந்த அணி தற்போது வென்றுள்ளது. 

இன்றைய ஆட்டம் நடைபெறவுள்ள மும்பை பிராபோர்ன் மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன் பின்பு இன்றுதான் வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கு பதிலாக ஜடேஜாவும், ரிஷப் பன்ட்க்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.