விளையாட்டு

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல கடுமையாக உழைக்கிறேன்: சிந்து

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல கடுமையாக உழைக்கிறேன்: சிந்து

jagadeesh

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல கடுமையாக உழைத்து வருவதாக பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியும், ஐதராபாத் Hunters அணியும் மோதின. ஐதராபாத் அணிக்காக களம் கண்ட சிந்து, முதல் போட்டியில் ‌‌காயத்ரி கோபிசந்த்தை எதிர்க்கொண்டார்‌‌.

இதில், 15-5 , 15-5 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இருப்பினும் சென்னை அணி 5-2 என்ற கணக்கில் ஐதராபாத் அணியுடனான மோத‌லை தமதாக்கியது. போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த சிந்து, அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தான் பதக்கம் வெல்ல வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக கூறினார். அதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.