விளையாட்டு

அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பிருக்கு: தேர்வுக்குழு தலைவர்

அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பிருக்கு: தேர்வுக்குழு தலைவர்

webteam

ஒரு நாள் கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு கதவுகள் அடைக்கப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்  கூறினார். 

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் போட்டியில் மட்டுமே சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சமீப காலமாக அவர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. 

இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத்  கூறும்போது, ‘2019-ல் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறோம். அப்படித்தான், ரஞ்சி மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம். ஸ்ரேயாஸ் ஐயரையும் அப்படித்தான் தேர்வு செய்தோம். ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்காதது பற்றி கேட்கிறார்கள். திறமையான வீரர்களை கண்டறியும் பொருட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறோம். ஒரு நாள் போட்டியில் அவர்களுக்கான கதவு அடைக்கப்படவில்லை. அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் மிடில் ஆர்டரில் அணியை இன்னும் வலுவாக்க வேண்டி இருக்கிறது. இந்திய அணி, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று விளையாட இருக்கிறது. கோலி தலைமையிலான அணி, அங்கும் சிறப்பாக விளையாடும்’ என்றார்.