விளையாட்டு

இந்தியாவை பழி தீர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து: இன்று 2-ஆவது டி20

இந்தியாவை பழி தீர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து: இன்று 2-ஆவது டி20

jagadeesh

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-ஆவது டி-20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறவுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 5 டி20, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி-20 ஆட்டம் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்திய பேட்ஸ்மேன்கள் ராகுலும், ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடி நியூசிலாந்துக்கு எதிராக மகத்தான வெற்றியை பெற்றது. இந்நிலையில் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து வெற்றிப்பெற வேண்டும் என்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் பவுலிங்கில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சாளற் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பவுலர்களின் பந்துகளை நியூசிலாந்து வீரர்கள் சிதறடித்தாலும், அணியின் வலுவான பேட்டிங் காரணமாக வெற்றிப் பெற்றது.

நியூசிலாந்து அணியிலும் பெரிதாக மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. அதே அணியுடன் நியூசி கேப்டன் வில்லியம்சன் களமிறங்குவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள். முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும் நியூசிலாந்து அணி வலுவாகவே இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றிப்பெற நியூசிலாந்து போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.