ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக செர்பியாவின் நோவாக் ஜோகாவிச் தொடர்ந்து விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ரேங்கிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நோவக் ஜோகோவிச் 7-6 (7-1), 6-4, 3-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் 31 ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை தோற்கடித்தார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 14-வது முறையாக 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார் ஜோகாவிச். இந்தப் போட்டியின்போதே வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். போட்டி முடிந்த பின்பு ஜோகாவிச் "அடுத்த சுற்று போட்டிக்கு முன்பாக அந்த காயத்தில் இருந்து மீண்டு களம் இறங்குவேனா என்பது தனக்கு தெரியவில்லை" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இந்நிலையில் 4 ஆவது சுற்றுக்கு முன்பான பயிற்சி போட்டியில் ஜோகோவிச் பங்கேற்கவில்லை என செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் காலிறு சுற்றுக்கு முன்பான 4 ஆவது சுற்றுப் போட்டியில் ஜோகோவிச் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.