விளையாட்டு

வெற்றிக்கு காரணம் கோலி மட்டுமல்ல, யார் தெரியுமா? ரவிசாஸ்திரி ஓபன் டாக்!

வெற்றிக்கு காரணம் கோலி மட்டுமல்ல, யார் தெரியுமா? ரவிசாஸ்திரி ஓபன் டாக்!

webteam

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிகளுக்கு கேப்டன் விராட் கோலி மட்டும் காரணம் அல்ல என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் போராடி தோல்வி அடைந்தது. இருப்பினும், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிரடி வெற்றியை சுவைத்தது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கு சென்றனர். கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணி தான் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்று, அங்கு ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளதாக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. 

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியுடனான சுற்றுப்பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ரவிசாஸ்திரி, “தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிக்கு கோலி மட்டும் காரணமல்லை. திறமையான பந்துவீச்சாளர்களின் செயல்பாடு தான் காரணம்” என்று கூறியுள்ளார். அத்துடன் குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஸ்குமார் போன்ற இளம் பந்துவீச்சளார்கள் எதிர்பாராத நேரத்தில் சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆட்டத்தின் போக்கை, வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.