விளையாட்டு

குல்தீப் சிறந்த பந்துவீச்சாளர்: அஸ்வின்

குல்தீப் சிறந்த பந்துவீச்சாளர்: அஸ்வின்

webteam

குல்தீப் யாதவ் சிறந்த பந்துவீச்சாளர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். ஒரு நாள் போட்டிகளில் அவர் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியுடனான ஒரு நாள் போட்டிகளிலும் அவர் இல்லை. இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அவர், இப்போது ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். இவரைப் போலவே ஜடேஜாவும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் குல்தீப் யாதவும் சாஹலும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

இதுபற்றி அஸ்வினிடம் கேட்டபோது, ‘இப்போது நான் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றாலும் எனக்கான வாய்ப்பு வீட்டின் கதவை தட்டும். 
ஏனென்றால், ஒரு நாள் போட்டிகளில் நான் அதிக தவறு ஏதும் செய்யவில்லை. குல்தீப் யாதவ் பற்றி கேட்கிறார்கள். அவர் ஆடிய போட்டிகளை அதிகம் பார்க்கவில்லை. அப்போது இங்கிலாந்தில் இருந்ததால் நேர வித்தியாசம் காரணமாக பார்க்க முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் அவர் சிறப்பாக பந்துவீசியிருப்பார் என நம்புகிறேன். அவர் சிறந்த பந்துவீச்சாளர்தான். யோ-யோ உடல் தகுதி டெஸ்ட் பற்றி கேட்கிறார்கள். அது அணிக்குத் தேவை என்றால் அதை நானும் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு கேப்டனுக்கும் அணியை மேம்படுத்த ஒரு பார்வை இருக்கும். அதன் படி அவர்கள் வழி நடத்துகிறார்கள். இப்போது கோலிக்கும் ஒரு பார்வை இருக்கிறது. அதை மதிக்க வேண்டும்’ என்றார்.