விளையாட்டு

பயிற்சியாளரால் அற்புதத்தை உருவாக்கிவிட முடியாது: திசாரா பெரேரா

பயிற்சியாளரால் அற்புதத்தை உருவாக்கிவிட முடியாது: திசாரா பெரேரா

webteam

பயிற்சியாளரால் எந்த அற்புதத்தையும் உடனே செய்துவிட முடியாது என்று இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசாரா பெரேரா கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதையடுத்து அந்த அணியின் புதிய பயிற்சியாளராக சந்திகா ஹதுருசிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பயிற்சியாளரான பின் இலங்கை அணி, பங்களாதேஷில் நடக்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. ஜிம்பாப்வே, பங்களாதேஷ், இலங்கை அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில், ப ங்களாதேஷூக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியது இலங்கை. 

பின்னர் பொறுப்பு கேப்டன் திசாரா பெரேரா கூறும்போது, ‘புதிய பயிற்சியாளராக ஹதுருசிங்கா கிடைத்திருப்பது எங்கள் அணிக்கு பிளஸ் பாயின்ட். ஏற்கனவே அவருடன் பணியாற்றி இருக்கிறேன். அவர் இப்போதுதான் அணிக்கு வந்திருக்கிறார். உடனடியாக யாராலும் எந்த அற்புதங்களையும் செய்துவிட முடியாது. அணியை நெறிபடுத்த அவருக்கு இன்னும் நேரம் வேண்டும். பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததே தோல்விக்கு காரணம்’ என்றார்.