விளையாட்டு

கிரிக்கெட் விளையாட வரும்படி யாரையும் கெஞ்ச வேண்டாம்: நவாஸ் ஷெரிப்

கிரிக்கெட் விளையாட வரும்படி யாரையும் கெஞ்ச வேண்டாம்: நவாஸ் ஷெரிப்

webteam

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வரும்படி யாரிடமும் கெஞ்ச வேண்டாம் என அந்நாட்டு கிரிக்கெட்‌ வாரியத்திற்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பட்டம் வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவின்போது பேசிய ஷெரிப், பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வரும்படி யாரிடமும் கெஞ்ச வேண்டாம் என அந்நாட்டு கிரிக்கெட்‌ வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். பாகிஸ்தானில் விளையாட விருப்பம் உள்ளவர்கள் வரலாம் என்றும், அதற்காக அவர்களிடம் எந்தக் கோரிக்கையும் விடுக்க வேண்டாம் எனவும் ஷெரிப் கூறினார்.

முன்னதாக, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பட்டம் வென்ற பிறகு, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ், பாகிஸ்தானில் எந்த முக்கிய கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. இனி மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து  கிரிக்கெட் விளையாடும் என நம்புவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.