விளையாட்டு

குடியரசுத் தலைவர் மட்டும் 70 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கலாமா?

webteam

நாட்டின் குடியரசுத் தலைவர் 70 வயதுக்கு மேற்பட்டவர் இருக்கலாம் என்றால், பிசிசிஐ தலைவர் மட்டும் ஏன் இருக்கக் கூடாது என்று முன்னாள் நிர்வாகி நிரஞ்சன் ஷா கேள்வியெழுப்பியுள்ளார். 
இதுகுறித்து பேசிய அவர், பிசிசிஐ நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது புரியவில்லை. நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜி (அவருக்கு வயது 81) 70 வயதுக்கு மேலும் பணியாற்றி வருகிறார். எனில், அந்த வயதுக்கு மேல் ஒருவர் பிசிசிஐ தலைவராக பணியாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒருவரால், அவர் உயிரோடிருக்கும் வரை பணியாற்ற முடியும் என்றும் நிரஞ்சன் ஷா கருத்து தெரிவித்துள்ளார். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய பதவிகளை வகிக்கக் கூடாது என்ற லோதா கமிட்டியின் பரிந்துரையால் நிரஞ்சன் ஷா பதவியை இழந்தார். இந்த நிலையில், லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பிசிசிஐ குழுவின் சிறப்பு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.