விளையாட்டு

"அடுத்த ஒலிம்பிக்கில் இந்திய தேசியக் கொடி நடுவில் பறக்க வேண்டும்" - மண்ப்ரீத் சிங்

jagadeesh

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தேசியக் கொடி தங்கம் வென்று பதக்க மேடையின் நடுவில் ஏற்றப்பட வேண்டும் என்று இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மண்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பின்பு வெண்கலப் பதக்கம் வென்றது. ஒலிம்பிக்கில் இத்தனை ஆண்டுகாலத்திற்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி பதக்கம் வென்றதை தேசமே கொண்டாடியது. இந்திய ஹாக்கி அணி பத்தக்கம் வென்றது அந்த விளையாட்டுக்கு புத்துயிரை அளித்திருப்பதாக பலரும் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து பேசியுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மண்ப்ரீத் சிங் "2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல வேண்டும். அப்போதுதான் பதக்க மேடையின் நடுவே நம்முடைய தேசியக் கொடி ஏற்றப்படும். அதுதான் நம்முடைய எதிர்கால இலக்காக இருக்க வேண்டும் என்று சக வீரர் ஹரித் சிங்கிடம் கூறினேன்" என்றார் அவர்.