விளையாட்டு

முதல் டி20 போட்டி : இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து!

EllusamyKarthik

நியூசிலாந்து கிரிக்கெட்  அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதற்கட்டமாக நடைபெற்று வரும் 3 போட்டிகள் டி20 தொடரின் முதல் போட்டி ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்துள்ளது. 

அந்த அணிக்காக கப்டில் மற்றும் மிட்செல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் ரன் ஏதும் சேர்க்காமல் வெளியேறினார் மிட்செல். பின்னர் வந்த மார்க் சேப்மேன் (Chapman), கப்டில் உடன் 109 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். 

50 பந்துகளில் 63 ரன்களை எடுத்து அவுட்டானார் சேப்மேன். பின்னர் வந்த பிலிப்ஸ், ரன் ஏதும் எடுக்காமல் மூன்று பந்துகளை எதிர்கொண்டு அவுட்டானார். அஷ்வின் 14-வது ஓவரில் இருவரையும் அவுட் செய்திருந்தார். 

கப்டில், 42 பந்துகளில் 70 ரன்களை குவித்து வெளியேறினார். டிம் செய்ஃபெர்ட், 12 ரன்களில் அவுட்டானார். இந்திய அணிக்காக பந்து வீசிய புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், அஷ்வின் மற்றும் சிராஜ் ஆகியோர் விக்கெட் வீழ்த்தி இருந்தனர். 

இந்தியா 20 ஓவர்களில் 165 ரன்களை எடுத்தால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும். கடந்த முறை இரு அணிகளும் விளையாடிய டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.