ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆசிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 4க்கு 1என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து மூன்று டி20 போட்டிகளில் இரு அணிகளும் ஆடுகின்றன. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடிய ரஹானே நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்காமல் இருந்த ஷிகர் தவான், அணிக்கு திரும்பியுள்ளார்.
அணி விவரம்:
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), தவான், ராகுல், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி (விக்கெட்), பாண்ட்யா, குல்தீப், சாஹல், பும்ரா, புவனேஷ்வர்குமார், நெஹ்ரா, அக்ஷர் படேல்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி-20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 7 ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.