விளையாட்டு

'நீ என் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு..' மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்!

'நீ என் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு..' மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்!

JustinDurai

தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் நடராஜன் வெளியிட்டுள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக நடராஜன் பங்கேற்க உள்ளார். இந்த தொடர் வரும் மார்ச் 12 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கிடையில் அடுத்த வாரம் இந்திய அணியுடன் அகமதாபாத் சென்று இணைய உள்ளார் நடராஜன். 

இந்நிலையில், தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கங்களில் நடராஜன் வெளியிட்டுள்ளார். குழந்தைக்கு ஹன்விகா என பெயர் சூட்டியுள்ள நிலையில், 'எங்களின் குட்டி தேவதை ஹன்விகா. நீ எங்கள் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு. எங்கள் வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியாக அமையவும் நீ தான் காரணம். எங்களை உன் பெற்றோராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் எப்போதும் உன்னை நேசித்துக் கொண்டே இருப்போம்' என உணர்ச்சிகரமாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.