ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்க வேட்டை நடத்தி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இன்று நடந்த ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் ககன் நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபிரிவில் மற்றொரு இந்திய வீரர் ஸ்வப்னில் சுரேஷ் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஸ்னுராஜ் சிங் வெண்கலம் வென்றார். காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதலில் நேற்று ஒரே நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்றிருந்தனர்.