அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இறுதிப் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் ரஷ்ய வீரர் மெத்வதேவ் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியில் 7-5,6-3,5-7,4-6,6-4 என்ற செட் கணக்கில் மெத்வதேவ்வை போராடி ரஃபேல் நடால் வீழ்த்தினார். இதன்மூலம் ரஃபேல் நடால் தனது 19 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். மேலும் இது நடாலின் 4ஆவது அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமாகும்.