வினேஷ் போகத்
வினேஷ் போகத் twitter
விளையாட்டு

”நேரில் விளக்கம் அளிக்காவிட்டால்..“ - வினேஷ் போகத்துக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு நோட்டீஸ்!

Prakash J

இதுதொடர்பாக அந்த நோட்டீஸில், “ஊக்க மருந்து சோதனைக்காக உங்களை அழைக்கப்பட்டிருந்த தேதியில் நீங்கள் வரவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் இறுதி முடிவுக்கு எடுப்பதற்கு முன்பு, ஏதேனும் தாங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதாக இருந்தால் அதுகுறித்து தெரியப்படுத்துவதற்காகவே இந்தக் கடிதம். இதைக் கவனமாகப் படியுங்கள். ஏனெனில் இது உங்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Vinesh Bhogat

ஹரியானா மாநிலம் சோனிபட்டில் கடந்த ஜூன் 27ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு நீங்கள் பரிசோதனைக்குத் தயாராக இருந்திருக்க வேண்டும். உங்களைச் சோதிப்பதற்காக நாங்கள் அந்த இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பியிருந்தோம். ஆனால் நீங்கள் அந்த இடத்தில் இல்லை. எனவே, ஏ.டி.ஆரின் கீழ் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆகையால் இதுதொடர்பாக 14 நாட்களுக்குள் பதிலளிக்கவும். இல்லையென்றால், சரியான காரணத்தைக் கூறவும்.

எடுத்துக்காட்டாக, சம்பந்தப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் இருந்ததாகக் கூறினால், தயவுசெய்து அதை உறுதிப்படுத்தும் விதமாக ஆதாரங்களை வழங்கவும். சோதனைக்கான நாளில், டி.சி.ஓ உங்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறித்தும் தாங்கள் கருத்து தெரிவிக்கவும். நீங்கள் ஆஜராகவில்லை என்றால், அதுகுறித்து கருத்தைத் தெரிவிக்கவும். அதற்கான விளக்கத்துக்கு நம்பத்தகுந்த ஆதாரங்களை இணைக்க வேண்டும். இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு மேலிடத்தால் மறுஆய்வு செய்ய ஒரு வாய்ப்பு வழங்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களில் வினேஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.