விளையாட்டு

பதற்றத்தில் கார் மாறி ஏறிய சீனிவாசன்!

பதற்றத்தில் கார் மாறி ஏறிய சீனிவாசன்!

webteam

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் பங்கேற்றார். அவர் கூட்டத்துக்கு வந்தபோது ஏராளமான மீடியாவினர் மைக்குகளை நீட்டியபடி முன்னே வந்தனர். இதைக் கண்டதும் வேகவேகமாக கட்டிடத்தின் உள்ளே நுழைந்தார்.

கூட்டம் முடிந்து அவர் வந்தபோதும், மீடியாவினர் மைக்குகளை நீட்டியபடி அவரிடம் கேள்வி கேட்க வந்தனர். அவர் எதற்கும் பதில் சொல்ல மறுத்து வேகவேகமாக சென்றார். விடாமல் மீடியா துரத்தியதால் பதற்றத்தில் தனது காருக்குப் பதில், சவுராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க கவுரவ செயலாளர் நிரஞ்சன் ஷா காரில் ஏறிவிட்டார். நிரஞ்சன் ஷா, ‘சார், உங்க வண்டி அங்க இருக்கு’ என்று ஞாபகப்படுத்தியதும் சுதாரித்து அவர் காருக்கு சென்றார். 

அப்போது வேகமாக ஓடிய ஒரு பத்திரிகையாளர், ‘எந்த தகுதியின் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொண்டீர்கள்’ என்று கேட்டார். அதற்கு, ‘உன்னை விட நான் அதிக தகுதியானவன்’ என்று கூறிவிட்டுச் சென்றார் சீனிவாசன்.