இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தமிழக வீரர் முரளி விஜய் அபார சதம் அடித்தார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முரளி விஜய்யும் தவானும் களமிறங்கினர். தவான், அவரை அடுத்து வந்த புஜாரா இருவரும் தலா 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று ஆடிய முரளி விஜய் அபார சதமடித்தார். இது அவருக்கு 11-வது டெஸ்ட் சதம்.
இந்திய அணி, 2.10மணி நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி, 245 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 101 ரன்களுடன், கேப்டன் விராத் கோலி 94 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
விராத் கோலி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது இந்திய வீரர் இவர். 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 105 வது இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.