ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் விளையாடுகின்றன.
இன்று மதியம் 3.30 மணியளவில் ஷார்ஜா மைதானத்தில் தொடங்கும் இப்போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும், வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்த இரண்டு அணிகளும் ஏற்கெனவே 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு அணிகளும் தலா 7 முறை வெற்றி பெற்றுள்ளது.