விளையாட்டு

‘ஐ.பி.எல் கோப்பை வெல்வதில் மும்பைக்கு அது சிக்கலாக இருக்கக்கூடும்’ பிராட் ஹாக்

‘ஐ.பி.எல் கோப்பை வெல்வதில் மும்பைக்கு அது சிக்கலாக இருக்கக்கூடும்’ பிராட் ஹாக்

EllusamyKarthik

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அடுத்த சில நாட்களில் துபாயில் நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்த சூழலில் ‘கோப்பையை வெல்வதில் மும்பைக்கு ஒரு விஷயம் சிக்கலாக இருக்கக்கூடும்’ என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹாக், யூடியூபில் அந்த சிக்கல் குறித்து விவரித்துள்ளார்.

அவர்கூறும்போது,  “எப்போதும் போல மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனிலும் டாப் 4 அணிகளில் ஒன்றாக இடம் பிடித்து பிளே-ஆப் சுற்று வரை முன்னேறிவிடும். இருப்பினும் கோப்பையை வெல்வதில் அந்த அணிக்கு சிக்கல் இருக்கக்கூடும். 

ஏனெனில் சிறந்த ஆல் ரவுண்டர்கள், சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் என அணியில் வீரர்களின் பலம் அதிகம் இருந்தாலும் வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வது மற்றும் பிளெயிங் லெவனில் எந்தெந்த வீரர்களை சேர்க்கிறார்கள்  என்பதை வைத்தே அந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். 

இந்த சீசனில் மும்பை அணியின் சூர்யா குமார் யாதவ் அதிரடியாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.