வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் பொல்லார்ட், மீண்டும் அப்பா ஆனார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் பொல்லார்ட். தற்போது உலகக் கோப்பைக்கான அந்த அணியின் மாற்றுவீரராக அணியில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல்-லில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். கடந்த ஐபிஎல் போட்டியில் அந்த அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர்.
இவர் மனைவி ஜென்னா. இவர்களுக்கு கைடன் என்ற மகனும் ஜனியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமானார், ஜென்னா அலி. அவருக்கு நேற்று முன் தினம் அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் பொல்லார்ட்.
அவர் மீண்டும் அப்பா ஆனதற்கு மும்பை இண்டியன்ஸ் அணி, தனது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துள்ளது. அதோடு அந்த அணியின் ஹர்திக் பாண்ட்யா, யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.