மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2013 ஐபிஎல் சீசனில் இருந்து விளையாடி வருகிறார் ஜஸ்ப்ரீத் பும்ரா.
இதுவரை மும்பைக்காக 89 ஆட்டங்களில் விளையாடியுள்ள பும்ரா 102 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் கோலி, தூபே மற்றும் படிக்கல் விக்கெட்டை வீழ்த்தி ஐபிஎல் அரங்கில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் ஒரு மெய்டன் உட்பட 4 ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே அவர் கொடுத்திருந்தார்.
இதில் ஹைலைட் என்னவென்றால் பும்ராவின் முதல் விக்கெட்டும், நூறாவது விக்கெட்டும் விராட் கோலி தான்.