டி20 போட்டிகளில் நான்காவதாக களமிறங்கி அதிக ரன்ரேட்டில் உள்ள இந்திய வீரர்களில் எம்.எஸ்.தோனி முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியா-இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 61, மணிஷ் பாண்டே 32, ஸ்ரேயாஸ் ஐயர் 24, ரோகித் சர்மா 17 ரன்கள் எடுத்தனர். இதற்கிடையே 4வது தொடக்க வீரராக களமிறங்கிய தோனி 22 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் டி20ல் நான்காவதாக களமிறங்கி அதிக ரன்ரேட் உள்ள இந்திய வீரர்கள் பட்டியலில் தோனி முதலிடம் பிடித்துள்ளார். அந்தப் பட்டியலில் 11 போட்டிகளில் 244 ரன்கள் குவித்து 61.00 ரன்ரேட்டை தோனி பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தில் 7 போட்டிகளில் 181 ரன்கள் குவித்து 45.25 ரன்ரேட்டில் ரோஹித் சர்மா 2வது இடத்திலும், 5 போட்டிகளில் 124 ரன்கள் குவித்து 41.33 ரன்ரேட்டுடன் விராட் கோலி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தோனி விளையாடியுள்ள அனைத்து டி20 போட்டிகளையும் ஒப்பிடுகையில் அவர் 4வது இடத்தில் களமிறங்கியுள்ள போட்டிகளிலேயே சிறப்பாக விளையாடியுள்ளார்.
இதனால் டி20-ஐ பொறுத்தவரையில் தோனிக்கு 4வது தொடக்கம் ராசியானதாக மாறியுள்ளது. அத்துடன் இந்தியா-இலங்கை இடையே இன்று இந்தூரில் நடைபெறும் 2வது டி20 போட்டியிலும் தோனி நான்காவதாக களமிறங்கி அசத்துவார் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.