விளையாட்டு

தோனியின் கைகள் பிக்பாக்கெட் அடிப்பவரை விட வேகமாக செயல்படும் - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி

webteam

ஸ்டெம்பிங் மற்றும் ரன்அவுட் செய்யும் போது தோனியின் கைகள் பிக்பாக்கெட் அடிப்பவரை விட வேகமாக செயல்படும் என தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். அவரது ஓய்வு முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியூள்ளார். இது குறித்து இந்தியா டுடேவுக்கு பேசிய ரவிசாஸ்திரி,

தோனி அனைத்து வடிவங்களிலுமான கிரிக்கெட்டையும் தனக்கானதாக ஆக்கியுள்ளார். அது தான் அவரது சிறப்பு. விக்கெட் கீப்பிங் மற்றும் ரன் அவுட் செய்வதில் தோனி அசாத்தியமானவர். அவர் ஸ்டெம்பிங் மற்றும் ரன்அவுட் செய்யும் போது அவரது கைகள் பிக்பாக்கெட் அடிப்பவரை விட வேகமாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.