விளையாட்டு

ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் மிடுக்குடன் சி.எஸ். கே-வின் ஜெர்சி!

ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் மிடுக்குடன் சி.எஸ். கே-வின் ஜெர்சி!

EllusamyKarthik

எதிர்வரும் ஐபிஎல் 2021 சீசனுக்கான ஜெர்சியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் மிடுக்குடன் வெளியாகி உள்ளது இந்த ஜெர்சி. இதனை சென்னை அணியின் கேப்டன் தோனி வெளியிட்டுள்ளார். வழக்கமான மஞ்சள் நிறத்துடன் தோள்பட்டையின் இரண்டு பக்கத்திலும் ராணுவ உடைக்கே உடையே பிரத்யேக தோற்றத்தில் ‘Camouflage’ ஆக காட்சி அளிக்கிறது சென்னை அணியின் ஜெர்சி. 

அதோடு மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றுள்ளது என்பதற்கு அடையாளமாக கர்ஜிக்கும் சிங்கத்தின் லோகோவிற்கு மேலே மூன்று ஸ்டார்கள் மின்னுகின்றன. மேலும் கேம் ஸ்பிரிட் உடன் விளையாடியாமைக்காக ஆறு முறை ஃபேர் பிளே விருதையும் வென்றுள்ளது. அதுமட்டுமல்லாது கடந்த சீசனை தவிர அனைத்து சீசனிலும் சென்னை அணி ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது அதன் அடையாளமாக தங்க நிறத்திலான பட்டையும் தோள்பட்டைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. 

“நாட்டின் நிஜ ஹீரோக்களுக்கு எங்களது பாராட்டுகளை வெளிப்படுத்தும் விதமிக இதனை செய்துள்ளோம். நீண்ட நாட்களாகவே இது குறித்து ஆலோசித்து வந்தோம். இப்போது அது கைகூடியுள்ளது” என சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

இந்த ஜெர்சியில் ஸ்பான்ஸர்களின் லோகோவும் இடம் பெற்றுள்ளன. ஜெர்சி வாங்க விரும்பும் ரசிகர்கள் சென்னை அணியின் வலைதளத்தில் ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.