விளையாட்டு

 தன் மனதுக்கு சரி என பட்டதை செய்து தோனி சாதித்த ஐந்து தரமான சம்பவங்கள் !!

 தன் மனதுக்கு சரி என பட்டதை செய்து தோனி சாதித்த ஐந்து தரமான சம்பவங்கள் !!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை 2000க்கு முன், பின் என இரண்டாக பிரித்து எழுதலாம். பிற்பாதியில் இந்திய அணியை தலைமை தாங்கிய கங்குலி, டிராவிட் மற்றும் தோனி மாதிரியான கேப்டன்கள் இந்தியாவின் ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றனர். இதில் தோனியின் பங்கு சற்று அதிகம். 

அணியின் வெற்றிக்காகவும், வீரர்களின் முன்னேற்றத்திற்காகவும் விளையாட்டு களத்தில் பலமுறை தன் மனதுக்கு சரி என பட்டதை செய்து, திறம்பட சாதித்து காட்டியவர் தோனி. அப்படி அவர் சாதித்து காட்டிய ஐந்து தரமான சம்பவங்கள் இங்கே…

டி20 உலக கோப்பை - 2007

இந்திய அணி 2007இல் நடைபெற்ற டி20 கோப்பையை வெல்ல மிகமுக்கிய காரணம் தோனியின் துணிச்சலான முடிவு தான். ஆறு பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலிருந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதும் அனுபவமில்லாத ஜோகிந்தர் ஷர்மாவை பந்து வீச சொல்லி அழைத்தார். 

அதோடு பந்தின் பேசை மாற்றி போட சொல்லி மிஷ்பாவின் விக்கெட்டை வீழ்த்தி கோப்பையை இந்தியா வெல்ல காரணம் தோனியின் முடிவு தான்.

50 ஓவர் உலக கோப்பை - 2011

2011 உலக கோப்பை தொடரில் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 114 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஐந்தாவது பேட்ஸ்மேனாக யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக இறங்கி அதிரடியாக விளையாடி கோப்பையை வென்று கொடுத்தார் தோனி.   

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராஃபி - 2013

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் 18 பந்துகளில் 27 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையிலிருந்த இங்கிலாந்து அணியை இஷாந்த், ஜடேஜா மற்றும் அஷ்வினை வைத்து மொத்தமாக காலி செய்து இந்தியா கோப்பையை வெல்லவும் தோனியின் முடிவு தான் கரணம். 

டி20 உலக கோப்பை - 2016

பங்களாதேஷிற்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக தோனி கடைசி பந்தில் பாண்டியவை ஷார்ட் பால் போட சொல்லிவிட்டு ஒரு கிளாவுஸை கழட்டி வைத்து விட்டு நிற்பார். அவர் எதிர் பார்த்தது போலவே பந்தை பேட்ஸ்ட்மேன் அடிக்காமல் விட்டதும் அதை லாவகமாக பிடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை ரன் அவுட் செய்திருப்பார். 

ரோஹித் ஷர்மாவை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறக்கி அழகு பார்த்தது

ஹிட் மேன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்திய அணியின் அதிரடி ஒப்பனர் ரோஹித் ஷர்மாவை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறக்கியதே தோனி தான். இன்று வரை ரோஹித் அந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.