ஓய்வு குறித்து தனது அறிவிப்புக்கு பின்பு தோனி வெகு இயல்பாக இருந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சரவ்தேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்தார். இப்போது சிஎஸ்கே அணியினருடன் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளார். தோனி தன்னுடைய ஓய்வு அறிவிப்பை சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டப்போதுதான் அறிவித்தார்.
தோனி குறித்து சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி "ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கணெக்டட்" நிகழ்ச்சியில் பகிர்ந்துக்கொண்டார். அப்போது "நான் பொதுவாகவே தோனியிடம் பிட்ச் குறித்து அதிகம் பேசுவேன். மேலும் அன்றையப் பயிற்சி குறித்தும் இருவரும் விவாதித்தோம். பின்பு பயிற்சி முடிந்ததும் நான் ஓய்வற்கைகு சென்றுவிட்டேன். அப்போதுதான் எனக்கே தெரியும் தோனி தன்னுடைய ஓய்வுக் குறித்த அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டப் பின்புதான் பயிற்சிக்கு வந்தார் என்பது"
மேலும் பேசிய பாலாஜி "தன்னுடைய ஓய்வு குறித்து அறிவித்தப் பின்பு வெகு இயல்பாக என்னிடம் வந்த தோனி, பிட்சில் அதிகமான நீரை இறைக்கும்படி கூறிவிட்டு சென்றார். பின்புதான்தான் எனக்கே தெரிய வந்தது, ஓய்வு அறிவிப்புக்கு பின்பே இயல்பாக வந்து என்னிடம் உரையாற்றினார் என்று. எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. அவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணம் அது. ஆனாலும் அவர் அந்தத் தருணத்தை வெகு இயல்பாக கடந்தார், அதுதான் தோனி. வாழ்வில் எந்தத் தருணமாக இருந்தாலும் அதனை அதன்போக்கில் எடுத்துக்கொண்டு நகர்வது தான் அவருடைய ஸ்டைல், ஓய்வு அறிவிப்பையும் அப்படியே எடுத்துக்கொண்டார்" என்கிறார் அவர்.