விளையாட்டு

தேதி 27, ஜெர்சி நம்பர் 7, ஃபைனலில் 7 வது முறை: தோனியின் 7 சென்டிமென்ட்!

தேதி 27, ஜெர்சி நம்பர் 7, ஃபைனலில் 7 வது முறை: தோனியின் 7 சென்டிமென்ட்!

webteam

பதினோறாவது ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றி, ‘நாங்க இன்னும் கிங்’தான் என்பதை நிரூபித்திருக்கிறது தோனியின் மஞ்சள் ஆர்மி!

மும்பை வான்கடே மைதானத்தில் ஐதராபாத் அணியுடன் நேற்று மோதிய சிஎஸ்கே, டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி வீரர்கள் முதலில் தடுமாறி பிறகு விளாசியதால், அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 36 பந்துகளில் 47 ரன்களும் யூசுப் பதான் 25 பந்துகளில் 45 ரன்களும், பிராத்வெயிட் 11 பந்துகளில் 21 ரன்களும் விளாசினர். சென்னைத் தரப்பில் நிகிடி, தாகூர், கரண் ஷர்மா, பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் ரன் குவிக்க திணறியது. டு பிளசிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஷேன் வாட்சனுடன், சுரேஷ் ரெய்னா இணைந்த பின் போட்டியில் புயல் கிளம்பியது. வாட்சன் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். சந்தீப் சர்மா வீசிய 13 ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். ரெய்னா 32 ரன்களில் வெளியேறினார். சிக்சர் மழை பொழிந்த வாட்சன் 51 பந்துகளில் சதமடித்தார். இந்த ஐபில் தொடரில் இது அவரது இரண்டாவது சதம். சென்னை அணி 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. வாட்சன் 117 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் தோனி, ‘பைனலுக்கு வந்தபின் அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் ரோல் என்ன என்பது தெரியும். பேட்டி ங் ஸ்டைலும் நன்றாகத் தெரியும். இதனால் மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன் தடுமாறினால் அடுத்து வரும் பேட்ஸ்மேனுக்கும் அது கடினமாகத் தான் இருக்கும். அவர்கள் அணியில் ஒரு பந்துவீச்சாளர் மட்டுமல்ல, பலர் அழுத்தத்தைக் கொடுத்திருக்க முடியும். அதனால் இது நல்ல பேட்டி ங் முயற்சி. அதோடு எங்கள் மிடில் ஆர்டர் மீது நம்பிக்கையும் வைத்திருந்தோம்.

டுபிளிசிஸை முதலிலும் ராயுடுவை பின் வரிசையிலும் இறக்கியதில் எந்த திட்டமும் இல்லை. (ரெய்னா அவுட் ஆனதும் அடுத்து பிராவோ தயாராக இருந்தபோது ராயுடு இறங்கினார்). அதற்குள் பிராவோ பேட் கட்டிக்கொண்டு தயாராகிவிட்டார். ஆனால் அவரை முன்பே இறக்கும் எண்ணமில்லை. பிராவோ அவர் ஸ்டைலில் ஆடுபவர். 

இதற்கு முந்தைய கோப்பையை வென்றபோது நடந்ததை ஞாபகத்துக்கு கொண்டு வருவது கடினம். பலர் புள்ளிவிவரங்கள் பற்றி பேசுகிறார் கள். இன்று (நேற்று) 27-ம் தேதி, என் ஜெர்சி எண் 7, இது எங்களுக்கு 7 வது இறுதிப்போட்டி. நாங்கள் கோப்பையை வெல்ல போதுமான காரண ம் இருக்கிறது. ஆனாலும் இதெல்லாம் காரணமல்ல, கடைசியில் நாங்கள் கோப்பையை வென்றுவிட்டோம்’ என்றார்