விளையாட்டு

தோனியுடன் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி!

தோனியுடன் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி!

webteam

ஜோக்கன்னஸ்பர்கில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து வெற்றியை கொண்டாடியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்றது. கடினமான பிட்ச்-சிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்து, ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டி வரும் 1-ம் தேதி டர்பனில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார் விக்கெட் கீப்பர் தோனி. 

இந்நிலையில் 3 வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, அதை தோனியுடன் பார்ட்டி வைத்து சனிக்கிழமை இரவு கொண்டாடியது. இந்தப் புகைப்படத்தை ஹர்திக் பாண்ட்யா டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.