விளையாட்டு

துபாயில் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட 'தல' தோனி ! வீடியோ

துபாயில் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட 'தல' தோனி ! வீடியோ

jagadeesh

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மற்றும் வீரர்கள் நேற்று மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார்.

ஐபிஎல் போட்டிகள் இந்தாண்டு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. துபாயில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் காண்கிறது. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னாவும், ஹர்பஜன் சிங்கும் தொடரில் இருந்து சொந்தக் காரணங்கள் காரணமாக விலகியுள்ளனர்.

இந்நிலையில் சிஎஸ்கே வீரர்கள் இருவர் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பயிற்சியை தொடங்க தாமதமானது. இந்நிலையில் தோனி, ஷேன் வாட்சன், ஜடேஜா, பியூஷ் சாவ்லா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். சிஎஸ்கே வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் தோனி பேட்டிங் மற்றும் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடுகிறார். அதனை பயிற்சியாளர் பிளமிங் பார்வையிடுகிறார்.

இன்னும் ஒரு சில நாள்களில் சிஎஸ்கேவின் மொத்த அணியும் பயிற்சியில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.