விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் - முதலிடம் பிடித்த தோனி

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் - முதலிடம் பிடித்த தோனி

rajakannan

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற இடத்தை தோனி பிடித்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதில், டி காக் 29, ரோகித் சர்மா 15 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள். இந்த இரு விக்கெட் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தோனி 132 எடுத்து, அதிக விக்கெட் எடுத்த கீப்பர் என்ற பெருமையை அடைந்துள்ளார். இதில் 94 கேட்ச் மற்றும் 38 ஸ்டம்பிங் அடங்கும். 

தோனிக்கு அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் 130 விக்கெட்களுடன் இரண்டவது இடத்தில் உள்ளார். ராபின் உத்தப்பா 90 விக்கெட் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் தோனி விக்கெட் கீப்பிங் செயல்பாட்டிலும் அசத்தியுள்ளார்.

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.