இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல்-ல் புனே அணி கேப்டன் பதவியில் இல்லாதது தனக்கு மகிழ்ச்சி என விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த 2017 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு, தோனி ரைஸிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக், தோனி கேப்டன் பொறுப்பில் இல்லாததால் ஐபிஎல் 10வது சீசனில் புனே அணியை பஞ்சாப் அணி எளிதில் வீழ்த்தும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். பஞ்சாப் அணிக்கு சேவாக் ஆலோசகராக உள்ளார். தோனி இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என புகழ்ந்துள்ள சேவாக், கேப்டன் யார் என தேர்தெடுப்பது புனே அணி நிறுவனத்தின் உரிமை எனவும் குறிப்பிட்டார்.