MS Dhoni
MS Dhoni File Image
விளையாட்டு

ரியல் எஸ்டேட் to பட தயாரிப்பு நிறுவனம்: அடேங்கப்பா.. தோனியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா..?

Justindurai S

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்கிறார் மகேந்திரசிங் தோனி. ஒரு கிரிக்கெட் வீரர் மீது ஏன் இவ்வளவு அன்பு? என்று கேட்கும் அளவுக்கான கட்டுக் கடங்காத ரசிகர் கூட்டம் தோனிக்கு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருக்கும் தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு, என்னென்ன தொழில்கள் செய்து வருகிறார் என்பது குறித்து பார்க்கலாம்.

MS Dhoni

StockGro அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, தோனியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1040 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ.4 கோடியும், ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு மேல் அவர் வருமானம் ஈட்டுகிறார்.

1. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிவரும் தோனி அதன்மூலம் இவருக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடி வருமானம் கிடைக்கிறது.

2. சமூக வலைத்தளம் வழியே ரூ.2 கோடி கிடைக்கிறது. தோனிக்கு இன்ஸ்டாகிராமில் 44 மில்லியன் ஃபாலோவர்ஸும், ட்விட்டரில் 8.6 மில்லியன் ஃபாலோவர்ஸும் உள்ளனர்.

3. தோனியை ஜியோ சினிமா, Dream 11, கோல்கேட், ஓப்போ, பூஸ்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் விளம்பர தூதராக நியமித்துள்ளன. இதன் மூலம் அவர் ரூ.4 கோடி முதல் ரூ.6 கோடி வரை வருமானம் பெறுகிறார்.

4. தோனி சொந்தமாக தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம், மஹி ரெசிடென்சி என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

5.பெங்களூரில் எம்எஸ் தோனி குளோபல் ஸ்கூல் என்று சொந்தமாக பள்ளியையும் நடத்துகிறார்.

MS Dhoni

6. செவன், கட்டாபுக், ஹோம்லேன் உள்ளிட்ட நிறுவனங்களிலும் மற்றும் பல விளையாட்டு நிறுவனங்களிலும் தோனி முதலீடு செய்துள்ளார். தோனியிடம் ஆடி, ஹம்மர் போன்ற பெரிய பிராண்ட் கார்கள் உள்ளன. இதோடு தோனியிடம் Confederate X132 Hellcat, அதிவேக பைக்குகளான H2R போன்ற அரிதான பைக்குகளும் உள்ளது.

7. ரியல் எஸ்டேட் துறையிலும் கால்பதித்துள்ள தோனி அதுமூலமாக 17.8 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். இப்படி பல வழிகளில் தோனிக்கு வருமானம் வருகிறது.

8. தோனியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் மூலமாக மொத்தமாக 30 கோடி ரூபாய் அவருக்கு தொகையாக கொடுக்கப்பட்டது.

9. 2011ம் ஆண்டு டேராடூனில் மிகவும் விலையுயர்ந்த ஆடம்பரமான வீடு ஒன்றை வாங்கினார். அதன் மதிப்பு ரூ.17.8 கோடி.