விளையாட்டு

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ படையுடன் சேர்ந்தார் தோனி

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ படையுடன் சேர்ந்தார் தோனி

rajakannan

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப் பட்டதை அடுத்து, பணியில் இணைந்தார். பாராசூட்டில் இருந்து கீழே குதிப்பதற்கான பயிற்சியை அவர் மேற்கொண்டார்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் தோனி இன்று இணைந்துள்ளார். இன்று முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காஷ்மீரில் அவர் பணியில் ஈடுபடவுள்ளார். அப்போது, ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார். இந்த பணிக்காக தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரை தவிர்த்துவிட்டு இரண்டு மாதகால அவகாசத்தை தோனி கேட்டிருந்தார்.