விளையாட்டு

மகளின் பள்ளிவிழாவில் தோனி: வைரலாகும் வீடியோ

மகளின் பள்ளிவிழாவில் தோனி: வைரலாகும் வீடியோ

rajakannan

மகேந்திர சிங் தோனி தனது மகளின் முதலாமாண்டு பள்ளி விழாவில் கலந்து கொண்டார். 

மகேந்திர சிங் தோனி தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. வழக்கமாக தோனி போட்டிகளில் விளையாடாத நாட்களில் கூட, அவரைப்பற்றிய செய்தி வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது. தோனி தொடர்பாக எந்த வீடியோ வந்தாலும் அவரது ரசிகர்கள் அதனை விரும்பி பார்ப்பார்கள். 

தற்போது, தோனி தனது மகள் ஜிவாவின் முதலாமாண்டு பள்ளி விழாவில் கலந்து கொண்ட வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தோனியின் மகள் அழகாக ஆடை உடுத்தி உள்ளார். தோனியின் மகள் ஜிவா ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஒரு நட்சத்திரமாக இருந்து வருகிறார். தோனி தனது மனைவி சாக்‌ஷி உடன் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மகளின் உடன் படிக்கும் மற்ற குழந்தைகளுடன் அவர் உரையாடினார். அந்த வீடியோ இப்போது வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.