விளையாட்டு

கால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 

webteam

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் நோக்கத்தில் கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளார். 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பைக்குப் பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. குறிப்பாக உலகக் கோப்பைக்குப் பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்கவில்லை. அப்போது அவர் துணை ராணுவத்தில் பணியாற்ற போவதாக பிசிசிஐயிடம் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் தோனி பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் தோனியும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஆகிய இருவரும் மும்பையில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களை ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதில், தோனி மற்றும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஆகிய இருவரும் கால்பந்து விளையாடுவதை போல் படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் அணிந்து இருக்கும் ஜெர்ஸியில் ‘Playing for Humanity’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தப் போட்டி எதற்காக விளையாடப்பட்டது என்பது குறித்த விவரம் தெரியவில்லை. 

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கிரிக்கெட்டில் களமிறங்குவதற்கு முன்பு கால்பந்து போட்டிகளில் மிகவும் நாட்டம் உடன் இருந்தார். இவர் உள்ளூர் கால்பந்து போட்டிகளில் தோனி விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.