இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மொத்தம் 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின் 440 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயினை முந்தியுள்ளார் அஷ்வின். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலர்களில் டாப்-8 இடங்களை பிடித்துள்ளவர்களில் ஒருவராக அவர் இணைந்துள்ளார்.
முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, ஆண்டர்சன், அனில் கும்ப்ளே, மெக்ராத், பிராட், வால்ஷ் ஆகியோர் முதல் ஏழு இடங்களில் உள்ளனர்.