விளையாட்டு

ஐபிஎல் 2017: ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்ட வீரர் யார் தெரியுமா?

ஐபிஎல் 2017: ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்ட வீரர் யார் தெரியுமா?

webteam

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் பத்தாவது சீசன் குறித்து சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் 350 மில்லியன் விவாதங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் உலக அளவில் புகழ்பெற்றதான ஐபிஎல் தொடர் மொத்தம் 47 நாட்கள் நடந்தது. இறுதிப் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான புனே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி திரில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

இந்த தொடரின்போது 350 மில்லியன் விவாதங்கள் நடைபெற்றதாக சமூகவலைதளமான பேஸ்புக் தெரிவித்துள்ளது. வீரர்களைப் பொறுத்தவரை பெங்களூரு அணியின் கேப்டனான விராத் கோலி குறித்தே நெட்டிசன்கள் அதிகம் விவாதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நடப்பு சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி குறித்தே பயனாளர்கள் அதிகம் விவாதித்ததாகவும் ஃபேஸ்புக் கூறியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற 8 அணிகளுக்கும் பிரத்யேக ஃபேஸ்புக் பக்கம் இருக்கிறது. அதில், தங்கள் அணி பங்கேற்கும் போட்டிகள், மைதானத்துக்கு வெளியே நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் போன்றவைகளை அவர்கள் பதிவிடுவதுண்டு. கோப்பையை வென்ற பின்னர் வீரர்களின் கொண்டாட்டத்தினை மும்பை அணி, ஃபேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.