விளையாட்டு

அதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை

அதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை

webteam

டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிக இரட்டைச் சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 295 பந்துகளை எதிர்கொண்ட கோலி இரட்டை சதம் அடித்து அமர்க்களப்படுத்தினார். இது அவர், பதிவுசெய்த 7 ஆவது சர்வதேச இரட்டைச் சதம் ‌ஆகும். இதன் மூலம் 6 இரட்டைச் சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரின் சாதனையை கோலி முறியடித்தார். 

முன்னதாக, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்களுக்கும் மேல் ரன் குவித்த கேப்டன் என்ற சிறப்புக்கு கோலி சொந்தக்காரர் ஆனார். அவர், ஜாம்பவான் வீரர் டான் பிராட்மேன் 8 முறை 150 ரன்களுக்கு மேல் ‌சேர்த்த சாதனையை முறியடித்தார். 

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனது முந்தைய தனிநபர் அதிகபட்ச ஸ்கோரான 243ஐ கடந்து 254 சேர்த்தார்.