விளையாட்டு

நோ பாலில் அதிக விக்கெட்டுகள்... மோர்னே மோர்கலின் வேதனையான சாதனை

நோ பாலில் அதிக விக்கெட்டுகள்... மோர்னே மோர்கலின் வேதனையான சாதனை

webteam

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நோபாலில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனை தென்னாப்பிரிக்க வீரர் மோர்னே மோர்கல் வசமிருக்கிறது. 

கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை நோ பால் வீசப்பட்டால், அந்த பந்தில் எடுக்கப்படும் விக்கெட்டுகள் (ரன் அவுட்டைத் தவிர) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் மோர்கல் இந்த சாதனையைப் படைத்தார். 

அந்த போட்டியின் போது மோர்னே மோர்கல் பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். ஆனால், கிரீஸூக்கு வெளியே மிதித்தபடி மோர்கல் பந்துவீசியதால், அதை நோ பாலாக நடுவர் அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நோ பாலில் மோர்னே மோர்கல் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவது சிரமமானது என்று கூறப்படும் நிலையில் இது வேதனையான சாதனையாகவே பார்க்கப்படுகிறது.