ஓய்வூதிய அதிகரிப்பின் மூலம் சுமார் 900 பேர் பயனடைவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய் ஷா கூறுகையில், ''தற்போது விளையாடும் அல்லது முன்னாள் வீரர்களின் நலன் மீது பிசிசிஐ அக்கறை கொண்டுள்ளது. அதனால் தான் அவர்களுடைய மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளோம். இதன்மூலம் 900 பேர் இதனால் பலனடைவார்கள். இதில் 75% பேருக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளோம். மேலும் முன்னாள் வீரர்களுக்கான மருத்துவச் செலவுக்கான தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
10-க்கும் மேற்பட்ட முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: தென் ஆப்பிரிக்காவை இன்றாவது வீழ்த்துமா இந்தியா? என்ன செய்யப்போகிறார் ரிஷப் பண்ட்?